Posts

Showing posts from August, 2022

தான் ஆடாவிட்டாலும்...

Image
மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக் கொண்டிருந்தான் கணவன். வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம். அந்த பெண்வீட்டார்கள் மகள் இறந்து விட்டாள் என்றே கூறிவிட்டார்கள்.  துணைக்கு யாரும் இல்லாமலே தாய்க்கு தாயாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து இன்று இவ்வளவு தூரத்திற்கு அழைத்து வந்த அவனுக்கு இப்பொழுது சற்று பயமாகவே இருந்தது.  ஒரு வருட காலமாக பேசாத அவன் அன்று தன் தாய்க்கு போன் செய்கிறான். "அம்மா மருத்துவமனையில் யாரும் இன்றி அனாதையாக நிற்கிறேன், உள்ளே அவள் வயிற்று பிள்ளையுடன் போராடுகிறாள் ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லா அனாதையாக நிற்கிறேனம்மா..." கேட்ட அம்மா பதில் ஏதும் சொல்லாமல் அழுதவாறே போனை கீழே வைத்து விட்டு நிற்க, அப்பா "யாரிடம் பேசினாய்" என கேட்க, அம்மா விபரத்தை சொன்னாள். சிறிய மௌனத்திற்கு பிறகு "உன் மகன் செய்த தவறுக்கு அந்த பெண் என்ன செய்வாள்? நீ போய் பார்த்து விட்டு வா.. ஆனால் நான் செத்தாலும் அவன் முகத்தில் விழிக்க மாட்டேன்" என்றார். அம்மா கிளம்பி வெளியே போன சில நிமிடங்களில்  போன் அழைப்பு வர அதை அப்பா எ...