Posts

40 வருட காதல் கதை

 எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.. ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான். இதை எதிர்பார்க்காத மனைவி "ஏன் இவ்வளவு  சீக்கிரமா போகிறீர்கள்?" என்று வினவினாள்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்... "நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே, கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றாள் மனைவி... "எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது, ஒரு நாள் சாப்பிடாமல் போனால் நான் ஒன்றும் செத்து விட மாட்டேன், போய் நீ நன்றாக சாப்பிடு..!" என்று சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான்... மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து  விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்...! (சேகருக்கு ஒரு தபால் அலுவலகத்தில் வேலை. அவனுடைய மனைவி ஹவுஸ் ஒய்ப். இருவரும் காதலித்து...

ஐந்து நன்மைகள் - தள்ளுவண்டியில்

Image
வாழ்க்கை எனும் ஓடம் , அது கற்றுக்கொடுக்கும் பாடம்!! - இன்று படித்ததில் மனதை தைத்தது! ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த சேறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்). “அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”. கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை. சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்ரீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குற...

புது வண்டி - படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்த கதை டீக்கடை வாசலில் புதிய ஸ்கூட்டரில் வந்திறங்கிய நடராசு ஸ்கூட்டரை நிறுத்தியும் நிறுத்தாமலும் "ரமேசு ஒரு டீ" என குரல் குடுத்தான். "நீ மொதல்ல உள்ள வா. அப்புறம் டீ சொல்லு," என மறுகுரல் உள்ளிருந்து வந்தது. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றவன், "டேய் பாஸ்கரு எப்படா பெங்களுருல இருந்து வந்த, அதும் பொதங்கிழமை அன்னிக்கி உன்ன பாக்கறதுக்கே அதிசியமா இருக்கு டா." "இன்னைக்கு காலைல தான்டா வந்தோம். பசங்களுக்கு சம்மர் ஹாலிடே. அதுமில்லாம நம்ம மாரியம்மன் கோயில் வேற சாட்டியிருக்காங்க இல்ல. அதான் நாலு நாள் லீவு போட்டுட்டு வந்துட்டேன். எப்படியும் நீ இங்க வருவேன்னு தெரியும். அதான் வீட்டுக்கு வந்ததும் நேரா இங்க வந்துட்டேன்." "ரமேசு ரெண்டு டீயா போடு" "உக்காரு ராசு," என எதிரிலிருந்த பெஞ்சை காட்டினான். அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கர் எதையோ எண்ணி சிரித்தான். "என்ன பாஸு, ஏஞ்சிரிக்கிற?" "இல்லடா நீ உள்ள வரும்போது வேட்டிய மடிச்சு கட்டிட்டு வந்த இல்ல, அத பார்த்தது பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சா அதாஞ் ...

தரிசனம்

#  கோலம் ! - ஆமருவி தேவநாதன். ''உள்ள போக முடியாது பாட்டியம்மா'' காக்கி உடை ஊழியனின் குரல் #கோலப்பாட்டிக்குப் புரியவில்லை. 91 வயதில் புரிய வேண்டிய அவசியமில்லை. ''ஏண்டாப்பா, நன்னாருக்கியா? ஒம்புள்ள என்ன பண்றான், படிக்கறானா?'' ''ஐயோ பாட்டி, அது எங்கப்பா. நான் தான் அந்தப் பையன். நல்லாருக்கேன். நீ வெளில போ, கூட்டம் சாஸ்தியா இருக்கு'' குமார் தள்ளாத குறையாகச் சொன்னான். செவிட்டுப் பாட்டிக்கி எப்பிடி சொல்றது...? ''செத்த நாழி ஆகும்கறயா? பரவால்ல, நான் நின்னு சேவிச்சுட்டுப் போறேன். பெருமாள் எனக்காக காத்திண்டிருப்பார்.'' ''பாட்டீ… உள்ள போக முடியாது. வரிசைல நிக்கணும். 3 மணி நேரம் ஆவும். நீ போயி பொறவு வா'' மென்று முழுங்கினாலும், குரல் கணீரேன்று சொன்னான் குமார். ''என்ன குமார், பாட்டிய மட்டும் உள்ள விடேன். பாவம் வயசாச்சு, கூட்டத்துல நிக்க முடியாது...'' 65 வயதுக் கல்யாணி பாட்டிக்காக கெஞ்சிப் பார்த்தாள். மாமியார் பிடிவாதம் அவள் அறிந்ததே. ''மாமி.., நீங்க சாதா நாள்ல வாங்க. வரிசைல நிக்க வாணாம். பாட்டிய சை...