அப்பாவுடன் பயணம்
சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் என் அருகில் அமர்ந்திருந்த பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது. 'அப்பா' என்று திரையில் வரும் அந்த அழைப்பை 'கட்' செய்து கொண்டே இருந்தார். "ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார்.. பேசலாமே" என்று சொன்னேன். "சும்மா எங்கிருக்க எங்கிருக்கன்னு கேட்பாருங்க" என சற்று சலிப்போடு பதில் சொன்னார். அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது. "அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிடனும் பின்னால பேசாமல் விட்டுவிட்டோம்னு வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை" என சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. காரணம் சிலவற்றின் அருமையை இழந்து தான் புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். சொன்னால் யாருக்கும் புரியாது. சென்னையிலிருந்து நான் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் குறைந்தது ஐந்தாறு முறையாவது என் அப்பா போனில் அழைத்து விடுவார். "பஸ் ஏறிட்டியா?" " சாப்டியா?" "மேல்மருவத்தூர் தாண்டிட்டியா?" "சிதம்பரம் வந்துட்டியா?" என ஏதாவது ஒன்றைக் கேட்...